"நீதிபதி வாகனம்" என ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் மது கடத்தல்

0 5403
சென்னையில், நீதிபதி வாகனம் என போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் மற்றும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட கர்நாடக மாநில மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

சென்னையில், நீதிபதி வாகனம் என போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் மற்றும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட கர்நாடக மாநில மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, "நீதிபதி" என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரும், அதற்கு பின்னால் ஒரு கண்டெய்னர் லாரியும் வந்துள்ளது. லாரியை சோதனையிட போலீசார் முற்பட்ட போது காரில் இருந்தவர்கள் போலீசாரை தடுத்தனர்.

சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்ட போது காரின் பின் இருக்கைகளை அகற்றி விட்டு மது பாட்டில்களை பதுக்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கண்டெய்னர் லாரி மற்றும் அதற்கு பின்னால் வந்த இரண்டு கார்களையும் சோதனையிட்ட போலீசார் 3,357 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். வாகனங்களில் இருந்த அனைவரும் தப்பிவிட சோனு என்பவனை மட்டும் போலிசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments